சிறு துளியுமகலாது
என்னோடு ஒட்டியபடி அலைகிறது மனப்பட்சி
பிடுங்கி
வெளியே எறியவும் முடியவில்லை
எப்போதும் என்னை எள்ளி நகையாடுகிறது
கோபம் கொண்டு திட்டித் தீர்க்கிறது
சிலசமையம் பரிகசிக்கிறது
நைப்புடைக்கிறது
பகைவனாய் நின்று எதிர்வாதம் புரிகிறது
ஒவ்வொரு கணமும் என்னை எச்சரிக்கிறது
எனக்காக பட்சாதாபப்படுவதும் கண்ணீர் விடுவதுமுண்டு
விடையளிக்க முடியா வினாக்களை எழுப்பி
நான் திகைத்திருக்கும் பொழுதில்
கைகொட்டிச் சிரிக்கிறது
தன்வழிச்செல்லென அடம்பிடிக்கிறது
பணியமறுத்து என்வழிச்சென்றால்
எனக்கான பொறியை அதுவே தயார் செய்கிறது
எப்போகிலும் அரிதாய் ஒரு பொழுதில்
என்முதுகில் தட்டிக்கொடுத்து பெருமிதங்கொள்கிறது
அத்துளிப் பொழுதுக்காகவேனும்
பாழாய்போன வாழ்கையை
வாழ்ந்து தொலைத்துவிடலாம் போலத்தோண்றுகிறது
0
19 மார்ச் 2010
No comments:
Post a Comment
உங்களிடமிருந்து..