Thursday, 6 October 2011

சுயம்



வெய்யில்

நீர் வற்றிக்கொண்டே போகிறது

உச்சியில் இன்னும் மிச்சமாய்

ஓரிரு ஆம்பல் பூக்கள்

தப்புத் தண்ணியில் அள்ளிப்போவதற்கு

பறியொடு காத்திருக்கிறான் செம்படவன்

நீரிடைத் துலங்கும் திட்டில்

ஓடு மீன் ஓடி உறு மீன் வருமென

ஒற்றைக்காலில் தவங்கிடக்கிறது கொக்கு

எந்தவிதச் சலனமுமின்றி

வாழுமிக் கணத்தை நீந்திச் சுகிக்கிறது

மீன் குஞ்சு


பின்பனி 2008

("இருள் யாழி" கவிதைத் திரட்டிலிருந்து)

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..