போர்
பெரும்
சூறையாய் எழுந்து
சுழற்றி
வீசிற்று
வீழ்ந்தேன்
தொறன்ரோ
பெரு நகரத்து
பேழை
வயிற்றுள்
இன்னும்
கிடந்து மாய்கிறேன்
செரிக்காது
பாரிய
எந்திரத்தின் சக்கரத்தில் ஒட்டிய
இரும்புத்துண்டென
உழன்று உழன்று ஓடி
நசிகிறேன்
பெருந்தெருக்களில்
எதிரும்
புதிருமாய் விரையும் வாகனங்களிடை
தவறி
வீழ்ந்த துண்டுப் பொதியென
நாலாபுறமும்
அடிபட்டலைந்து
சிதறுண்டு போகிறேன்
வின்டர்ப்
பனியின் உறைவில்
விறைத்து
விறைத்து
உடல் நைந்துபோயிற்று
ஓசோன்
பொத்தலில் ஒழுகும் நெருப்பில்
தோல்
பொசுங்கி வேகிறது
ஆண்டுகள்
இருபது கழிந்தும்
இன்னும்;
இன்றும்; இக்கணமும்
இந்தப் பாழும் உடலைச் சுமந்து சுமந்து
அலைகிறேன்
நடைப்பிணமாய்
கனக்கிறது
உடல்
ஒருகால்
இற்றுச்
செரித்து
மண்ணில்
உரமாய் வீழ்ந்தால்
நாளை
இன்
நிலத்துக்குரிய ஒரு மரமாயெனினும்
எழுவேன்
04
09 2012

No comments:
Post a Comment
உங்களிடமிருந்து..